இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் (SLTDA)
முகாமைத்துவ உதவியாளர் (ஒப்பந்த அடிப்படை) - வேலைவாய்ப்பு அறிவிப்பு
சர்வதேச அளவில் இலங்கையை நினைவூட்டும் உலகின் நேரடி மற்றும் பல்வேறு அனுபவங்களால் நிரம்பிய நாடு என்ற வகையில் மேம்பாட்டு நோக்கு அடிப்படையில் செயற்படும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் (SLTPB) மூலம் முகாமைத்துவ உதவியாளர் (ஒப்பந்த அடிப்படை) பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் சுற்றுலா தகவல் நிலையங்கள் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவற்றுக்கு நியமிக்கப்படுவர்.
📌 அடிப்படை கல்வித் தகைமைகள்
- க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிங்களம்/தமிழ், ஆங்கில மொழி மற்றும் கணிதம் உட்பட நான்கு (04) பாடங்களுக்காக ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- க.பொ.த. (உ/த) பரீட்சையில் (பொது ஆங்கில பரீட்சை தவிர) மூன்று (03) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
🎂 வயது வரம்பு
18 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
✅ பொதுவான தேவை
- ஆங்கில மொழியில் கையாளும் திறன் (ஆங்கிலத்தில் பேசும் திறன் கட்டாயமாகும்)
- வெளிநாட்டு மொழிகள் தொடர்பான அறிவு
- இதனையொத்த துறையில் அனுபவம்
💰 சம்பள விபரம்
| அடிப்படை சம்பளம் | ரூபா 43,312.00 + வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு |
| EPF பங்களிப்பு | சம்பளத்தின் 15% |
| ETF பங்களிப்பு | அடிப்படைச் சம்பளத்தின் 3% |
📝 விண்ணப்ப நடைமுறை
உறவினர் அல்லாத இருவரின் விபரங்கள் அடங்கிய சுயவிபரக் கோவை ஒன்று, பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ் மற்றும் சேவைச் சான்றிதழ்களின் நகல் பிரதிகளுடன், கீழ்க்காணும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும். கடிதத்தின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிடவும்.
தலைவர்,
லேக் ஹவுஸ் கட்டிடம்,
இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் - அடித்தளம் 01,
இல. 35, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 10.
